அதானி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்!...நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் ஹிண்டன்பர்க்  நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கிய அதானி குழுமம், பலநூறு கோடி ரூபாய் ரகசிய பரிவர்த்தனையில் ஈடுபட்டு பங்குச்சந்தையில் ஊழல் செய்ததாக ஆதாரங்களை வெளியிட்டது.

மேலும் அதானியின் போலி நிறுவனம் என்று குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் செபியின் தலைவராக இருக்கும் மாதவிக்கும்,  அவரது கணவருக்கும் பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம்  வெளியிட்டிருந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

இந்த நிலையில், தொழிலதிபர் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது, தொழில் துறையில் தற்போது மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, அதானி மீது லஞ்ச புகார்கள் உள்ள நிலையில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் அவர் சுதந்திரமாக வலம் வருவதாகவும்,  இந்த புகாரில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், அதானி முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உடனே அமைக்க வேண்டும் என்றும், தொழிலதிபர் அதானி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adani should be arrested immediately rahul gandhi insists on setting up a joint parliamentary committee


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->