வேதனையின் உச்சம்! மக்களின் வலி... இனியாவது, விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு - முன்னாள் அமைச்சர் வெளியிட்ட புகைப்படங்கள்!
ADMK C Vijayabaskar condemn to TNGovt Pudukottai Hospital issue DMK
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பராமரிப்பின்றி இருப்பதாகவும், உடனடியாக இதனை சரிசெய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்டகால கனவாக இருந்த அரசு மருத்துவக் கல்லூரியை நமது அதிமுக ஆட்சியில் அரும்பாடுபட்டு வெறும் 11 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு அதனை திறந்து வைத்து இன்றளவும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
ஆனால், இன்றைக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பராமரிப்பின்றி சுற்றுப்புறம் முழுவதும் புதர்மண்டி, திறந்த வெளியில் ஓடும் மருத்துவக் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நம் கனவு கண்ணீராய் காட்சியளிக்கிறது.
உருவாக்குவது தான் பெருமை; ஆனால், பெரும் முயற்சி எடுத்து நாம் உருவாக்கிக் கொடுத்ததை முறையாக பராமரித்து பாதுகாக்கக் கூட இந்த அரசால் இயலாதது வேதனையின் உச்சம்.
இனியாவது, விழித்துக்கொண்டு மாவட்டத்தின் பெருமையாக விளங்கும் மருத்துவக் கல்லூரியை பராமரித்து மக்களின் வலியையும், வேதனையையும் போக்கிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK C Vijayabaskar condemn to TNGovt Pudukottai Hospital issue DMK