கருணாநிதி காணொலி காட்சி அரங்கத்திற்கு ஆப்பு வைத்த அ.தி.மு.க... தேர்தல் கமிஷனில் பரபரப்பு புகார்.! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான பாபு முருகவேல் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் ஒன்றை கொடுத்துள்ளார். 

அதில், தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் விதமாக காட்சி அரங்கத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒலி, ஒளி காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. 

அந்த ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டும். காணொளி அரங்கத்தை மூடி முத்திரை இட வேண்டும். கருணாநிதி நினைவிடத்தில் இரவு நேரங்களில் தி.மு.கவின் சின்னம் பிரதிபலிப்பது போல் உள்ளது. 

அதனையும் ஒளிராமல் நிறுத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் ஒலி, ஒளி காட்சிகள் அமைப்பு அமைப்பை நிறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk complaint election commission


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->