ஜெயலலிதா மறைவிற்கு பின் தொடர் தோல்வியை சந்திக்கும் அதிமுக.!
admk continue fail in parliment election
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த முறை 32 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடம் கூட கிடைக்காததால் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்த கடைசி நாடாளுமன்ற தேர்தல் ஆகும். அந்த தேர்தலில் 'இந்த லேடியா? அல்லது மோடியா?' என்ற அவரது பிரசார முழக்கம் தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல் 44 சதவீத வாக்குகள் பெற்று சாதனை படைத்தது.
அவரது மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. சந்தித்த 2019 மற்றும் தற்போதைய 2024-ம் உள்ளிட்ட 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க., பா.ஜனதா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளை இணைத்து தேர்தலை சந்தித்தது.
அதில் அ.தி.மு.க. 20 இடங்களில் போட்டியிட்டு தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அந்த தேர்தலில் அ.தி.மு.க.விற்கு 19.39 சதவீத வாக்குகள் தான் கிடைத்தது. இதுதான் அ.தி.மு.க. வரலாற்றில் அந்த கட்சிக்கு கிடைத்த குறைந்தபட்ச வாக்கு சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
admk continue fail in parliment election