அழித்துவிடலாம் என நினைக்காதீங்க - நேரடியாகவே தாக்கி பேசிய சிவி சண்முகம்!
admk cvs say about spv raid sep
கோவை மாவட்டம், குனியமுத்தூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்லத்தில், இன்று காலை வருமான வரிதுறை சோதனையில் ஈடுபட்டது.
மேலும், வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் என்பவரின் வீட்டிலும் காலை முதலே இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.
இதற்கிடையே, சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பிய, கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 7பேர் உள்ளிட்ட அதிமுகவினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சோதனை நடைபெறுகிறது என்று, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக மூத்த நிர்வாகிகளை வழக்குகள் போட்டு அழித்துவிடலாம் என நினைக்கின்றனர் என்றும், அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு ரத்து செய்துள்ளது என்றும் சி.வி.சண்முகம் குட்டன்சாட்டியுள்ளார்.
முன்னதாக. சொத்து வரி, மின் கட்டணம் போன்ற பல்வேறு பிரச்னைகளை பேச விடாமல் தடுக்கவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறுகிறது இந்த ரெய்டு நடைபெறுவதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார்.
மேலும், "மின்சார கட்டண உயர்வை எதிர்த்து இபிஎஸ் போராட்டம் அறிவித்தார்.எப்போதெல்லாம் அதிமுக போராட்டம் அறிவிக்கின்றார்களோ அப்பொழுதெல்லாம் திமுக ரெய்டு விடுகிறது என்றும், கொலை, கொள்ளை இன்று சிங்கார சென்னையை சீர்கேடான சென்னையாக மாற்றி வருகிரார்கள் என்றும், சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நடக்காது என எண்ணக்கூடாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
admk cvs say about spv raid sep