அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்! எடுக்கப்பட்ட முடிவு என்ன? அதிகாரபூர்வ செய்தி வெளியானது!
ADMK District Secretary meet 17052023
இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் ஆலோசனை குறித்து அக்கட்சியின் தலைமை அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த செய்திக்குறிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், தலைமைக் கழகம் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (17.05.2023 - புதன் கிழமை), மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டக் கழகச் செயலாளர்களும், பிற மாநிலக் கழகச் செயலாளர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், கழகத்தில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருப்பவர்களின் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தலுக்கான பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும்; வருகின்ற 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற உள்ள கழக மாநாட்டை எழுச்சியுடன் நடத்துவது குறித்தும்; கழகப் பணிகளை விரைந்து ஆற்றுவது குறித்தும்; கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் விரிவாக ஆலோசனை வழங்கினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேய்ந்த செய்தி அக்கட்சியின் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ADMK District Secretary meet 17052023