2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக... எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


சேலம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணியை நம்பி தான் கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார், மக்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் செய்த சாதனைகளை நம்பி மக்களை சந்திக்க வில்லை, தேர்தலில் நிற்பதாக தெரியவில்லை. கூட்டணியை நம்பிதான் தேர்தலை சந்திக்கிறார்.

அதன் மூலமாக தான் வெற்றிப் பெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லாக் கூட்டங்களிலும் பேசிக் கொண்டு இருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னபடி நான் சொல்லும் ஜோசியம் பலிக்கும்; 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கூட்டணிக் கட்சிகள் திமுக அரசு மீது விமர்சனங்கள் வைக்கவில்லை. இப்போது விமர்சனங்கள் வைக்கிறார்கள் என்றால் திமுக கூட்டணியில் விரிசல் இருப்பதாகத்தான் அர்த்தம்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi Palanisami Say about Election 2026 DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->