என்ன பதில் சொல்லப்போகிறார் ஸ்டாலின்? இனியாவது.... எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் முத்தையன்பட்டி என்ற இடத்தில் அரசு மதுக்கடையில் மது அருந்தும்போது, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் உசிலம்பட்டி காவல் நிலைய காவலர் முத்துக்குமார் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். 

இந்நிலையில், இதனை கண்டித்து இன்று தமிழக சட்டப்பேரவையில் குரல் எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, "திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதலே தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் சுதந்திரமாக செயல்படுவது அன்றாட நிகழ்வாக இருக்கிறது.

இந்த தகவலை காவல்துறையினருக்கு தெரிவிப்பவர்களுக்கு எதிராக கொலைவெறித் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், காவலரையே கொலை செய்யும் அளவிற்கு போதைப்பொருள் வியாபாரிகள் துணிந்துவிட்டனர் என்பதையே உசிலம்பட்டி காவலர் முத்துக்குமாரின் கொலை உணர்த்துகிறது.

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த இந்த திமுக அரசு எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காவலர் முத்துக்குமாரின் மரணத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் முக ஸ்டாலின்? காவல்துறை இனியாவது, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK EPS Condemn to DMK Govt MK Stalin Madurai PC Murder


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->