யுகாதி திருவிழா..மழை வேண்டி பெருமாளை வழிபட்ட பொதுமக்கள்!
Ugadi Festival People pray for rain
யுகாதி திருவிழாவை முன்னிட்டு ஆண்டிபட்டியில் பொதுமக்கள் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர்.நாட்டில் நல்ல மழை பெய்து, மக்கள் வளமுடனும், நலமுடனும் இருக்க மக்கள் பிராத்தனை செய்தனர்.
தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் முக்கிய பண்டிகையான யுகாதி திருநாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. வசந்த காலத்தின் வருகையை குறிக்கும் இந்த புத்தாண்டு தினம் பாரம்பரிய, பண்பாட்டு அடையாளத்தோடு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான யுகாதி திருநாள் நேற்று தெலுங்கு மற்றும் கன்னட மக்களால் விமரிசியாக கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டி மேல தெருவில் அமைந்துள்ள கம்மவார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பெருமாள் சுவாமி கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பை ( யுகாதி) முன்னிட்டு பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது .
யுகாதி வருடப் பிறப்பான நேற்று பெருமாள் கோவிலில் பக்தர்கள் முன்னிலையில் புது வருட பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு பூஜை தொடங்கப்பட்டது .அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. வரும் வருடம் நாட்டில் நல்ல மழை பெய்து, மக்கள் வளமுடனும், நலமுடனும் இருக்க பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
English Summary
Ugadi Festival People pray for rain