அப்படி போடு! ஸ்டாலினை வீழ்த்த, அவர் எடுத்த அதே அஸ்திரத்தை கையிலெடுத்த எடப்பாடி பழனிச்சாமி?!  - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றது முதல், சந்தித்த அனைத்து தேர்வுகளிலும் அதிமுக தோல்வியை சந்தித்து வருகிறது. 

குறிப்பாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த தோல்விக்கு பிறகு அதிமுக மீண்டும் ஒருங்கிணைய வேண்டும், அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை மீண்டும் இணைத்து, அதிமுகவை வலிமையான ஒரு கட்சியாக மீண்டும் கட்டமைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை எழுந்து வருகிறது. 

இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குண்டான காரணம் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுகவின் கூட்டணி குறித்த விவாதமும் எழுந்து வருகிறது. 

இந்த நிலையில், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கான யூகங்களை வகுக்க, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை அதிமுக தலைமை அனுப்புவதாக அணுகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2021 சட்டமன்ற பொது தேர்தலில் திமுக ஆட்சியை பிடிப்பதற்கும், மாபெரும் வெற்றியை பெறுவதற்கும் இதே பிரசாந்த் கிஷோர் தான் தேர்தல் விவரங்களை வகுத்துக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது அவர் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதில் இருந்து ஒதுங்கி உள்ள நிலையில், அவரிடம் ஆலோசனை பெற்று வருகின்ற 2026 தேர்தலை எப்படி சந்திக்கலாம், என்பது குறித்து அதிமுக தலைமை அவரை அணுகி உள்ளதாக தற்போது பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Prashanth Kishore 2026 Election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->