அதிமுக  வேட்பாளர் தொடர்பான ஒப்புதலுக்கான சுற்றறிக்கையின் படிவம் | அதிரடியில் எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தலை முன்னிட்டு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இன்று விசாரணை செய்து, முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதில், ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் உகந்த பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க, பொதுக்குழுவை கூட்ட வேண்டும், அந்த வேட்பாளரை அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு களமிறங்கியுள்ளது.

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தொடர்பான ஒப்புதலுக்கான சுற்றறிக்கையின் படிவம் நாளை காலை 9 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் நாளை நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மற்ற மாவட்டங்களின் செயலாளர்கள் நாளை பெருந்துறையில் படிவங்களை பெற்றுக்கொள்ள உள்ளார்கள் என்ற பரபரப்பு தகவலும் வெளியாகியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS side next move After SC Order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->