மறக்க முடியுமா இந்த நாளை? அதிமுக முன்னாள் எம்.பி., பரபரப்பு டிவிட்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ பன்னீர்செல்வம் ஆளும் திமுக அரசுக்கு ஆதரவாகவும், டிடிவி, சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் வகையிலும் செயல்படுவதாக கூறி, எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் 2500 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

இந்த விவகாரம் முற்றிய நிலையில், ஓபிஎஸ்-யை கட்சியில் இருந்து நீக்கியும், அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்தும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நிறைவேற்றியது.

இதனை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில், அதிமுக பொதுகுழு கூட்டம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வரவுள்ளது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்பி மைத்ராயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், கடந்த 2017 ஆம் ஆண்டு, இதே நாளில் ஓபிஎஸ் பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நேற்று ஒரு தோற்றம்., இன்று ஒரு மாற்றம்., என்ற எம்ஜிஆர் பாடல் நினைவுக்கு வருவதாக, அந்த பாடலின் சில வரிகளையும் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் அந்த பதிவு, "5ஆண்டுகளுக்குப் பின் திருப்புமுனையில் நிற்கிறோம். தலைவர் பாடல் நினைவுக்கு வருகிறது.

நேற்றொரு தோற்றம்
இன்றொரு மாற்றம்.,. 
பார்த்தால் பார்வைக்கு தெரியாது...
தொடங்கிய பாதையில் 
தொடர்ந்து வராமல் 
தூரத்தில் நின்றால் புரியாது...


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ex mp twit about ops eps


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->