சற்றுமுன் | அதிமுக எம்.பி., தொடர்ந்த வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ADMK Head office CVS case hc order to CBCID
கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் பேருந்து, காா், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. கலவரம் காரணமாக அதிமுக அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, பின்னா் நீதிமன்ற உத்தரவின்பேரில் ‘சீல்’ அகற்றப்பட்டது.
இந்த கலவரம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து, இந்த சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக அலுவலகம் சூறை தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி., சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவில், "உரிய விசாரணை நடத்த சிபிசிஐடி-க்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும். டிஜிபி உத்தரவிட தவறினால் வழக்குகளை வேறு தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என்று அதிமுக எம்பி சிவி சண்முகம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிமன்றம், அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கை விரைந்து விசாரணை செய்து முடிக்க வேண்டும் என்று, சிபிசிஐடி போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், விசாரணை குறித்து அறிக்கையை வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது : அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
English Summary
ADMK Head office CVS case hc order to CBCID