தமிழக வரலாற்றில் இன்று ஓரு கருப்பு நாள்! ஒரு குடும்பம் கொள்ளையடிக்க தமிழ்நாடு தினந்தினம் சீரழிகிறது! ஜெயக்குமார் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சமத்துவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, தமிழக வரலாற்றில் இது ஓரு கருப்பு நாள் என்று தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

இதுஇக்குறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தாயின் கருவறையை விட புனிதமானதாக கருதப்படும் வகுப்பறையில் ஆசிரியை கத்தியால் குத்தி கொலை!

தமிழக வரலாற்றில் இது ஓரு கருப்பு நாள்!

தந்தையும்-மகனும் அடுத்தவர்களை விமர்சனம் செய்ய காட்டும் ஆர்வத்தை ஆட்சியில் காட்டியிருந்தால் இந்த அவலங்கள் தொடர்ந்து நிகழுமா? 

இதன் பிறகு ’இது என் ஏரியா?’ என சினிமா நடிகர் போல வசனம் பேசி விளக்கம் அளிக்க Unfit அமைச்சர் அன்பில் மகேசை அனுப்பினால் ஆசிரியரின் உயிர் திரும்பி வந்து விடுமா?

ஒரு குடும்பம் கொள்ளையடிக்க தமிழ்நாடு தினந்தினம் நிர்வாக சீர்கேட்டால் சீரழிகிறது!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்பது எள்ளளவும் இல்லை" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதேபோல் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

பரிதாபமாக உயிரிழந்த ஆசிரியை ரமணி அவர்களின் குடும்பத்தாருக்கும், சக ஆசிரியப் பெருமக்கள், மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த வாரம் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கத்திக் குத்து; இந்த வாரம் அரசுப் பள்ளியில் சர்வ சாதாரணமாக உள்ளே நுழைந்து அரசுப்பள்ளி ஆசிரியை மீது கத்தியால் குத்திக் கொலை - என தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மக்களை மிகுந்த அச்சமூட்டுகிறது.

ஆசிரியை ரமணி அவர்களின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், பலியான ஆசிரியையின் குடும்பத்துக்கு அரசு துணை நிற்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Jayakumar Condemn to DMK MKStalin Udhay Anbil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->