அதிமுக ஜெயகுமார் வழக்கில் தமிழக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்!
ADMK Jeyakumar case DMK Govt SC judgement
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நிலத்தைக் குறித்த உரிமைத் தகராறு, முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரின் மருமகன் நவீன் குமார் மற்றும் அவரது சகோதரர் மகேஷ் இடையே நீண்ட காலமாக நிலவி வருகிறது.
இதற்கிடையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த ஜெயக்குமார், தனது அரசியல் தாக்கத்தையும், ஆதரவாளர்களின் மிரட்டலையும் பயன்படுத்தி நிலத்தை சுதந்திரமாக அபகரித்ததாக மகேஷ் புகார் தெரிவித்தார். இதனையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன் குமாருக்கு எதிராக கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யுமாறு ஜெயக்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை, நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் விஸ்வநாதன் கொண்ட அமர்வு எடுத்துக்கொண்டது. விசாரணையின் போது, "உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட விருப்பமில்லை" என தெரிவித்த நீதிமன்றம், மாநில அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
English Summary
ADMK Jeyakumar case DMK Govt SC judgement