இந்த விடியா அரசு வெட்கி குனிய வேண்டும் - நீதிபதியின் கருத்தை எதிரொலித்த எடப்பாடி கே பழனிச்சாமி.!
ADMK leader EPS Say about dmk govt
இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தாவது, "கள்ளக்குறிச்சி மாணவி மர்ம விவகாரத்தில், மாணவியின் பெற்றோர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளனர்.
இந்த வழக்கில் நீதிபதி அவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதில், 'தமிழகம் அமைதி பூங்கா என்ற நிலை புரட்டிப் போட்டு விட்டது' என்ற தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மேலும், 'போலீசார் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை, சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை' என்றும் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
பெண்களுக்கு பாதுகாப்பிலும், சட்ட ஒழுங்கு பாதுகாப்பிலும் சரி, இந்த விடியா அரசு செயல் இழந்து விட்டது. இந்த விடியா அரசு வெட்கி குனிய வேண்டும் என்று, இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசு இந்த கலவரம் குறித்து விசாரணை செய்யும் என்று சொல்லி இருக்கிறது. ஊடகத்திலும், பத்திரிகைகளும் இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டதாக செய்தியை பார்த்து நான் அறிந்திருக்கிறேன்.
என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று தான் பொறுத்துப் பார்க்க வேண்டும். அதன் பிறகு கருத்து தெரிவிக்க முடியும். தற்போது நீதிபதி சொன்ன கருத்தை மட்டுமே சொல்ல முடியும்" என்று எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தார்.
English Summary
ADMK leader EPS Say about dmk govt