#BigBreaking || வரும் 11 ஆம் தேதி பொதுச்செயலாளர் தீர்மானம் உறுதி..., எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பரபரப்பு பேட்டி.!
ADMK One Head issue EPS side press meet july
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர் பி உதயகுமார், பெஞ்சமின் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நத்தம் விஸ்வநாதன் தெரிவிக்கையில்,
"அதிமுகவின் சட்ட விதிகளின்படி பொதுச் செயலாளர் மறைந்துவிட்டாலோ, பொதுச் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டதோ, அந்த பதிவை வெற்றிடம் ஆகிவிட்டால், ஏற்கனவே நியமிக்கப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று கழகத்தின் விதி தெளிவாக இருக்கிறது.
ஆகவே இப்போது இரட்டை தலைமை இல்லாமல், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லாமல் போய்விட்ட சூழ்நிலையில், தலைமை கழக நிர்வாகிகள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சட்ட விதிகளுக்கு உட்பட்டு, தற்போது இந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்துகிறார்கள். இதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை. இந்த பிரச்சனையும் இல்லை. இந்த பொதுக்குழு பதினோராம் தேதி திட்டமிட்டபடி மிகச் சிறப்பாக நடைபெறும். எழுச்சியோடு நடைபெறும்.
அந்த பொதுக்குழு கூட்டத்தில் 99 சதவீத தலைமை கழக நிர்வாகிகளும், 99 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களும், 99 சதவீத கழகத் தொண்டர்களும், இன்றைக்கு ஏகபித்த விருப்பம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒற்றை தலைமை வேண்டும். அது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். அதனை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும் எடப்பாடி தரப்பு அளித்த பேட்டியை கான....
English Summary
ADMK One Head issue EPS side press meet july