#BigBreaking || அதிமுகவின் பொதுக்குழுவுக்கு தடை....? ஓபிஎஸ் தலையில் இடியை இறக்கிய உயர்நீதிமன்றம்.!
ADMK OPS EPS CHENNAI HC CASE JUNE
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதிமுகவின் ஒற்றை தலைமையை தேர்ந்தெடுக்க உள்ள பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மேற்கொண்டு வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு, தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டு உள்ளது.
மேலும், வருகின்ற ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை முடக்குவதற்கு உண்டான ஆலோசனைக் கூட்டத்தை ஓபிஎஸ் தரப்பு மேற்கொண்டது.
இதற்கிடையே, ஜூலை 11ஆம் தேதி நடைபெறுகின்ற பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரியும், கட்சிப் பதவிகளில் மாற்றம் கொண்டுவர தற்காலிக தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையிட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை 11ல் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை விசாரணை செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
எப்படியாவது பொதுக்குழுவுக்கு தடை கிடைத்துவிடாதா? என்று எதிர்பார்த்து காத்திருந்த ஓபிஎஸ் க்கு இது பெரும் பின்னைடைவு என்று சொல்லப்படுகிறது.
English Summary
ADMK OPS EPS CHENNAI HC CASE JUNE