#BigBreaking || எந்த தீர்மானமும் இல்லை... ஒரே விவாதம் மட்டும் தான்... அடித்து இறங்கும் எடப்பாடி... அதிர்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு.!
ADMK OPS EPS General committee MEET
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமான அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
2,665 பேர் பங்கேற்கும் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு எடப்பாடி கே பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் வந்தார். இரட்டை தலைமை வேண்டாம்... ஒற்றை தலைமை வேண்டும் என்றும் கோஷம் பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
அப்படி இல்லை எனில், இந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பற்றி மட்டுமே விவாதிக்கப்பட உள்ளதாக வெளியான அந்த தகவல் தெரிவிக்கின்றது.
ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், விவாதம் மட்டும் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒற்றை தலைமையாக எடப்பாடிபழனிசாமி தேர்வாகும் வரை பிற தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டாம் என்றும் எடப்பாடி தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றது.
இன்றைய பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்ற இருந்த நிலையில், அது எதுவுமே இன்று நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
ADMK OPS EPS General committee MEET