#BREAKING || அந்தர்பல்டி அடித்த அதிமுக முன்னாள் அமைச்சர்., சற்றுமுன் நேரில் சென்று ஆதரவை தெரிவித்து ஆரவாரம்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில், ஓபிஎஸ் ஒரு பக்கம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதே சமயத்தில், எடப்பாடி கே பழனிசாமிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது.

மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்கள் அறுபத்தி ஆறு மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி கே பழனிசாமி பக்கம் வந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுக்குழு கூட்டத்திற்கான நாள் நெருங்க.. நெருங்க.. எடப்பாடி கே பழனிசாமியின் கை இமயம் போல் ஓங்கி வருவதாக, அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அதிமுகவின் ஒற்றை தலைமையக எடப்பாடிபழனிசாமி வருவது காலத்தின் கட்டாயம் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஓபிஎஸ் மக்கள் மத்தியில் செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ள தவறி விட்டதாகவும், திமுக பக்கம் மெல்லிய போக்கைக் கடைப்பிடித்ததாகவும், அதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கான வேலைப்பாடுகளை ஓ பன்னீர்செல்வம் முன்னெடுத்தாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக கருதப்பட்ட மாஃபா பாண்டியராஜன் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS EPS ISSUE EX MINISTER SUPPORT TO EPS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->