BREAKING | ஓபிஎஸ்-க்கு மொத்தமும் காலி : சற்றுமுன் எடுத்த நடவடிக்கை - வெளியான பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


ஓ.பி.எஸ். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இல்லாத நிலையில், அவர் தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருவது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், ஓபிஎஸ்-யை அதிமுக அலுவகத்தில் அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கை உடனும், இன்று டிஜிபியிடம் அதிமுக சார்பாக ஜெயக்குமார் மனு அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், "ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் மனு அளித்தோம். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்க டிஜிபியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ். வருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை; கட்சிக்கு தொடர்பில்லாத அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிமுக அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

அதிமுகவுக்கும், ஓபிஎஸ்.க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் கும்பல் சூறையாடியது. ஓபிஎஸ் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பு தான் தற்போதைக்கு இறுதியானது. ஓ.பி.எஸ். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இல்லாத நிலையில், அவர் தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருவது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது" என்று ஜெயக்குமார் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS HEAD OFFICE ISSUE CHENNAI TAMILNADU


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->