பொதுக்குழு நடக்கும் இடம் நோக்கி பேரணியாக சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்களால் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள, சென்னை வானகரத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தை நோக்கி, ஓபிஎஸ் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பேரணியாக வந்தனர்.

அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், இத்தனை பேர் செல்வதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். மேலும் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 

அப்போது ஓபிஎஸ் தரப்பில் வந்த ஆதரவாளர்கள், நாங்களும் கட்சியின் நிர்வாகிகள் தான். நாளை நடக்கவுள்ள ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடுகள் எப்படி நடந்து இருக்கிறது? ஓபிஎஸ்-க்கு எதிராக ஏதேனும் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளதா? என்பதைப் பார்ப்பதற்காக செல்கின்றோம். வழி விடுங்கள் என்று போலீசாரிடம் அனுமதி கேட்டனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை மண்டபத்தின் வாயில் வரை பேரணியாக வருவதற்கு அனுமதி தந்தனர்.

பின்னர் மண்டபத்திற்கு உள் செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி மறுத்து, திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS Supporters rude


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->