டெல்லியில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்.!!
agnipath issue congress tomorrow protest
இந்திய ராணுவத்தில் அக்னி வீரர்கள் என்ற புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகால ஒப்பந்தத்தில், ஆண்டுக்கு 50,000 வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பல மாநிலங்களில் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இத்திட்டத்தால் முப்படைகளில் உள்ள படைப்பிரிவுகளில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பின் இவர்களில் 25 சதவீதம் பேர் துணை ராணுவ படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி வீரர்களாக தேர்வு செய்யப்படுவோரில் 75 சதவீதம் பேருக்கு பணி பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பலன்கள் இல்லை என்பதால் திட்டம் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இளைஞர்கள் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் தற்போது சென்னையிலும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னை தலைமை செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரணி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த இளைஞர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில், மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தயுள்ளது. காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை பங்கேற்கின்றனர். மேலும், வேளாண் சட்டங்களைப் போல அக்னிபத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். நாட்டின் இளைஞர்களுக்கு தலைவணங்கி திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வலியுறுத்தி உள்ளார்.
English Summary
agnipath issue congress tomorrow protest