திமுகவினர் கடத்தி சென்று அடித்தனர்..!!காணாமல் போன அதிமுக வேட்பாளர் பரபரப்பு புகார்..!!
AIADMK candidate complained DMK members beat him
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் காரில் அதிமுக வேட்பாளர் திருவிக பயணம் செய்த போது வேடசந்தூர் அருகே தாக்குதல் நடத்தி வேட்பாளரை மர்ம நபர்கள் கடத்தினர். சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு நேற்று மாலை 6:30 மணி அளவில் திண்டுக்கல் மாவட்டம் கல்வார்பட்டி காவல் நிலைய சோதனைச் சாவடியில் அதிமுக வேட்பாளர் திருவிகவை இறக்கிவிட்டு மர்ம கும்பல் தப்பி சென்றது.
அவரை மீட்ட திண்டுக்கல் போலீசார் விசாரணைக்காக கரூர் அழைத்து வந்தனர். விசாரணை முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய திருவிக"ஏழு பேர் கொண்ட கும்பல் என்னை கடத்தி சென்றனர். அவர்கள் அனைவரும் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். நத்தம் காட்டுப்பகுதியில் என்னை வைத்து 5 மணி நேரமாக அடித்து துன்புறுத்தினர். கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என அடித்தனர்.
மேலிடத்தின் உத்தரவின் பேரில் என்னை கடத்தியதாக கூறினர். என்னை கடத்தியது திமுகவை சேர்ந்தவர்கள் தான். பிறகு என்னை கல்வார்பட்டி சோதனை சாவடி அருகே இறக்கிவிட்டு தப்பி சென்றனர். இதனை அடுத்து அங்கிருந்து தப்பித்து மீண்டும் வந்தேன்" என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
English Summary
AIADMK candidate complained DMK members beat him