அதிரடி திருப்பங்களுடன் வெளியாகியுள்ள அதிமுக வழக்கின் தீர்ப்பு விவரம்! ஓபிஎஸ் வாதம் செல்லாமல் போனது இப்படித்தானா?!  - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதில், ஓ பன்னீர்செல்வம், அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கம் செய்த சிறப்பு தீர்மானத்தை பொறுத்தவரை, அதை பிரதான வாழ்க்கு தான் தீர்மானிக்க முடியும்.

தற்போதைய நிலையில் 7 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்த  சிறப்பு தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்தால், அது கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்பதால், ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது.

பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்தால், கட்சியை வழிநடத்தும் தலைவர் இல்லாமல், கட்சி பெரிதும் பாதிக்கப்படும். தடை விதித்தால் அது ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதுடன், கட்சியின் செயல்பாட்டையும் பாதிக்கும்.

எந்த அதிகாரமும் இல்லாமல் ஜூலை 11 இல் பொதுக்குழு கூட்டப்பட்டதால், அதில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படை முகாந்திரம் மற்றவை என ஓபிஎஸ் தரப்பின் வாதத்தை நிராகரிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதால், தீர்மானங்களும் செல்லுபடியாக கூடியதாகவே உள்ளது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டி உள்ளார்.

பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானமும், இடைக்கால பொதுச் செயலாளரை நியமற்ற தீர்மானங்களும் செல்லும் என்றும் குறிப்பிட்ட நீதிபதி, தீர்மானங்களுக்கு தடை விதித்தால் மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் கட்சியை நிர்வகிக்க வேண்டிய நிலை வரும். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதால் கட்சி செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்படும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Chennai HC Case Judgement details 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->