தேர்தல் அதிகாரியா..?? இல்லை ஸ்டாலின் அடியாளா..?? கடிதத்திற்கு இபிஎஸ் தரப்பு கடும் கண்டனம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக கருத்து கேட்டு கூட்டம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இது தொடர்பாக அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாநில கட்சிகளுடன் கருத்து கேட்டு கூட்டம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் அதிமுகவுக்கு தமிழக தேர்தல் அதிகாரி சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதற்கு அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இன்பதுரை தனது ட்விட்டர் பக்கத்தில் "இபிஎஸ்-ஐ சட்ட ஆணையம் ஏற்று கடிதம் அனுப்புகிறது. அதிமுக பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு கணக்கை இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்று வலைதளத்தில் பதிவேற்றுகிறது.

ஆனால் தமிழக தேர்தல் அதிகாரி ஒருங்கிணைப்பாளர் என கடிதம் அனுப்பினால் அவர் தேர்தல் அதிகாரியா..? இல்லை ஸ்டாலின் அடியாளா.? " என கடுமையான வார்த்தைகளால் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK condemns TN Election Commissions letter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->