காணும் இடமெல்லாம் மது.. நீங்க "தமிழ்நாடு முதல்வரா அல்லது டாஸ்மாக் மேலாளரா?".. அதிமுக கடும் விமர்சனம்..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் 4 இடங்களில் மதுபானம் தரும் இயந்திரம் சோதனை முறையில் டாஸ்மார்க் நிர்வாகத்தால் நிறுவப்பட்டுள்ளது. இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு இணையதள வாசிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள டாஸ்மாக் நிர்வாகம் சென்னையில் நான்கு எலைட் மதுபான கடைகளில் பணம் செலுத்தினால் மதுபானம் தரும் இயந்திரம் சோதனை அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது.

மதி பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக இருந்த புகாரை அடுத்து மதுபானம் தரும் வெண்டிங் மெஷின் அமைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக மதுரை மண்டல ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "500 - 500 டாஸ்மாக் கடைகளாக குறைப்பதாக சொல்லிவிட்டு எல்லோருக்கும் எல்லா இடத்திலும் கிடைக்கும் வகையில் தானியங்கி மது விற்பனையாம் - modernisation செய்வதற்கு எவ்வளவோ துறைகள் இருக்கிறது. 

ஆனால் இளைய சமுதாயத்தை மதுவிற்கு அடிமையாகவே வைத்திருப்பதுதான் திராவக மாடலா? முதலில் கல்யாண மண்டபத்தில் மதுபான விற்பனை என்றார்கள் தற்போது கானும் இடமெல்லாம் மது விற்பனை என்கிறீரார்கள்? நீங்கள் என்ன தமிழ்நாடு முதல்வரா அல்லது டாஸ்மாக் விற்பனைக்காண மேலாளரா??" என விமர்சனம் செய்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK criticized setting Tasmac ATMs in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->