19-ல் இபிஎஸ், 21-ல் ஓபிஎஸ், 23-ல் சசிகலா! அடுத்தடுத்து வெளியான அறிவிப்புகள்! - Seithipunal
Seithipunal


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 19.12.2022 அன்று நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் இன்று விடுத்துள்ள அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், வருகின்ற 19.12.2022 - திங்கட் கிழமை மாலை 5 மணியளவில், சென்னை, வானகரம், ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள் என தலைமைக் கழகத்தின் சார்பில் 7.12.2022 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள், தோழமை கிறிஸ்தவ தலைவர்கள், அருட்தந்தையர், அருட்சகோதரிகள், கிறிஸ்தவப் பெருமக்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளார்கள்.

எனவே, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகப் பொறுப்புகளில் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு, கிறிஸ்துமஸ் கால அன்பைப் பகிர்ந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்."

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக கீழ்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் வரும் 23ந் தேதி சசிகலாவும், 21 ந் தேதி ஓபிஎஸ் -யும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK EPS sasikala ops Christmas


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->