#BREAKING | நாளை காலை...! அதிமுகவினருக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி கொடுக்கும் அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் வருகின்ற 26 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை காலை எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒற்றை தலைமை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்புப்படி தற்போது கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க அதிமுகவின் மூத்த தலைவர்கள் முடிவு செய்து, அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், இன்று யாரும் எதிர்பாராத விதமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நாளை முதல் நாளை மறுநாள் வரை பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 26 ஆம் தேதிபொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி நாளை காலை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எப்படி பார்த்தாலும் இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது. காரணம் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வகுத்துள்ள தேர்தல் சட்ட விதிகள் அப்படியாக அமைந்துள்ளது.

இதன் காரணமாக தேர்தல் நடைபெறாமலேயே எடப்பாடி பழனிச்சாமி போட்டி இன்றி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில் இந்த பொதுச் செயலாளர் தேர்தலை தடுத்து நிறுத்துவதற்கு  ஓ பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றத்தை நாட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK General secretary election march 2023 eps


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->