சொத்து வரியை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக மனிதச் சங்கிலி போராட்டம் அறிவிப்பு!...எப்போது?...எங்கே? - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் நடைபெற்ற சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் 6% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சொத்துவரி உயர்வுக்கு அனைத்து எதிர்கட்சிகளும் தங்களது கண்டங்கனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டாலினின் திமுக அரசு கடந்த 40 மாதகால ஆட்சியில்;

* மூன்று முறை மின்கட்டண உயர்வுடன் இனி ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு

* பத்திரப் பதிவு கட்டணங்கள் உட்பட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு

* பால் பொருட்கள் விலை பலமுறை உயர்வு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு; நியாய விலைக்கடைகளில் குறித்த நேரத்தில் பொருட்கள் வழங்கப்படாமை

* கொலை, கொள்ளை என்று தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு சீர்கேடு பெண்கள், சிறுமியருக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள்;

* போதைப் பொருட்களின் சேத்தியாக மாறிய தமிழகம்

* சென்னை மாநகராட்சியில் மயான பூமியை தனியார் மயமாக்கும் முடிவு

* ஏற்கெனவே உயர்த்தப்பட்ட 100 சதவீதம் மற்றும் 150 சதவீதம் சொத்து வரி உயர்வுடன் இனி ஆண்டுதோறும் 6 சதவீதம் மொத்து வரி கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு; இதனால் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டணங்கள் ஆண்டு தோறும் உயர்த்தப்படும் நிலை

என்று தமிழக மக்களின் வாழ்கையை ஒட்டுமொத்தமாக சீரழித்து வருகிறது.

இந்த நிலையில், 40 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான திரு. ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் வரும் 8-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK human chain protest announcement demanding withdrawal of property tax when where


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->