அதிமுக பிரமுகர் படுகொலையில் அதிர்ச்சி! முன்விரோதத்தால் கொலை செய்த 2 பேர் கைது! - Seithipunal
Seithipunal


தென்காசியில் அதிமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 2 பேரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். 

கடந்த 8ம் தேதி அதிமுக பிரமுகர் வெளியப்பன் தென்காசி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து,  போலீசார்  மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மேலநீலித நல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் அவரது பெரியப்பா மகன் கோவேந்திரன் தரப்பினருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான வெளியப்பன் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்துள்ளதும்,  இதனால்  கடந்த 8ம் தேதி காலை வெளியப்பன் நடை பயிற்சி மேற்கொண்ட போது அவரை பாலமுருகன் தரப்பினர் வழிமறித்து அரிவாளால் வெட்டியதும், இதில், பலத்த காயமடைந்த வெளியப்பன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. 


இது தொடர்பாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அளித்த உத்தரவின் பேரில் பாலமுருகன் மற்றும் கோவேந்திரன் ஆகியோரை பனவடலிசத்திரம் போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்து, மேலும் இந்த வழக்கு தொடர்பாக  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK leader assassination shocked 2 people arrested for killing due to enmity


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->