#BigBreaking | அதிமுக செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும் - பிரதமர், அமித்ஷா, நட்டா சந்திப்பு குறித்து தம்பிதுரை பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


கர்நாடக சட்டமன்ற பொது தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிடுவதற்கு 10 இடங்கள் ஒதுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அது குறித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்த அதிமுக எம்பி தம்பிதுரை ஆலோசனை நடத்தியதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மேலும், அடுத்தடுத்து நடந்துள்ள இந்த சந்திப்புகள், அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்திலும், அதிமுக-பாஜக இடையாள கூட்டணி விவகாரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே,  ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான பெங்களூர் புகழேந்தி, கர்நாடக மாநில சட்டமன்ற பொதுதேர்தலில் அதிமுக போட்டியிடம் என்றும், அதற்கான வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி வருவதாகவும் அறிவித்துள்ளார். மேலும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து ஓபிஎஸ் கொடுத்த கடிதம் ஒன்றையும் புகழேந்தி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிடுவது பற்றி, வரும்  16ஆம் தேதி அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசிய தலைவர் நட்டா ஆகியோரை மரியாதை நிமிர்த்தமாகவே சந்தித்தேன் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK MP Thampidurai Say About Karnataka Election ADMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->