ஓபிஎஸ்-ஸின் மேல்முறையீடு மனு : உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதிமுக அலுவலகத்திற்குள் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஒ பன்னீர்செல்வம் உள்ளே நுழைந்தார். 

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு தடுக்க முயல, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை காரணமாக வருவாய்த்துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். 

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ், இபிஎஸ் என இரு தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு மற்றும் காவல்துறை தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமி மனுவை ஏற்று அலுவலகத்தின் சாவியை அவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர். 

அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் மேல்முறையீடு மனு வரும் செப்டம்பர் 12ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 


இதற்கிடையே, கடந்த 72 நாட்களுக்கு பிறகு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை அதிமுகவின் தலைமைக் அலுவலகமான 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வருகை புரிந்தார். 

அலுவலகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்களான, அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., செல்வி ஜெ ஜெயலலிதா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Office case ops sc info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->