ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நிறுவனம்.. மீண்டும் கட்டணம் உயர்த்தப்படும்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்போது வர்த்தக போட்டியின் காரணமாக அதிக அளவிலான வருமானத்தை இழந்து உள்ள டெலிகாம் நிறுவனங்கள் அடுத்தடுத்து கட்டணத்தை உயர்த்தி வருகிறது. 

இதனிடையே நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான பாரதி ஏர்டெல் முக்கியமான முடிவு எடுத்துள்ளது. ஜியோவின் தாக்கத்திலிருந்து மீண்டும் தனக்கான வர்த்தகத்தை தொடர்ந்து பெற துவங்கியுள்ள பாரதி ஏர்டெல், டிசம்பர் காலாண்டில் கட்டண உயர்வு, கூகுள் முதலீடு ஆகியவற்றின் மூலம் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டு முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. 

இந்நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் முக்கியமான முடிவு எடுத்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் டெலிகாம் சேவை திட்டங்களின் கட்டண உயர்வு அடுத்த மூன்று அல்லது நான்கு மாதத்தில் இல்லையென்றாலும், 2022ஆம் ஆண்டில் கட்டாயம் கட்டண உயர்வு இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், முன்புபோல் ஏர்டெல் நிறுவனம் கட்டணத்தை உயர்த்துவதில் எவ்வித தயக்கத்தைக் காட்டாது. 

சந்தையில் முதல் ஆளாக கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றாலும் தயங்காமல் உயர்த்தப்படும் என பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் காலாண்டு முடிவு எடுக்கும் பின்பு தெரிவித்துள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே டெலிகாம் சேவை நிறுவனங்களில் அதிக அளவில் ஏர்டெல் நிறுவனம் கட்டணத்தை உயர்த்தியது, மீண்டும் கட்டணத்தை உயர்த்த உள்ளதால் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Airtel recharge price increase maybe 3 month


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->