இந்துக்கள் பசுக்களை தாயாகப் போற்றுகிறார்கள்., ஈத் அல்-அதா பண்டிகையின் போது பசுக்களை பலியிடுவதை தவிர்க்க வேண்டும் - இஸ்லாமிய கட்சி தலைவர் வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


ஜூலை 10-ம் தேதி இந்தியாவில் கொண்டாடப்படும் ஈத் அல்-அதா பண்டிகையின் போது பசுக்களை பலியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) தலைவர் பதுருதீன் அஜ்மல் வலியுறுத்தியுள்ளார்.

அசாம் மாநிலத்தின், துப்ரி தொகுதியின் மக்களவை எம்.பி.யும், ஜமியத் உலமாவின் மாநிலத் தலைவருமான பதுருதீன் அஜ்மல், "இந்துக்கள் பசுக்களை தாயாகப் போற்றுகிறார்கள், எனவே அதற்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

நேற்று அசாமின் கச்சார் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பதுருதின் அஜ்மல் தெரிவிக்கையில், “இந்துக்கள் பசுக்களை தாயாக கருதுகிறார்கள், சனாதன நம்பிக்கை அதை புனித சின்னமாக வணங்குகிறது. இஸ்லாம் கூட எந்த ஒரு பிராணியையும் துன்புறுத்தக் கூடாது என்று கூறுகிறது.

ஈத் பண்டிகையின் போது பசுக்களை கொல்ல வேண்டாம் என்று இஸ்லாமியர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், மற்ற விலங்குகளை பலியிடுமாறு முஸ்லிம் சமூகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன், அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வார். 

இந்தியாவின் மிகப்பெரிய இஸ்லாமிய செமினரியான தாருல் உலூம் தியோபந்த் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈத் அன்று பசுக்களைப் பலியிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது, நான் அதையே திரும்பத் திரும்பச் சொல்கிறேன்: தயவு செய்து பசுக்களை பலியிடாதீர்கள்” என்று அஜ்மல் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIUDF chief Badruddin Ajmal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->