அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் அஜித்குமார்!
AJITH Kumar WISH Edappadi Planisami AIADMK
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும், அதிமுகவின் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்தும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி, ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
இதனையடுத்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடிகர் அஜித் குமாருக்கு போன் மூலம் தொடர்புகொண்டு, அஜித்தின் தந்தை மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது அதற்க்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்குமார், பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
English Summary
AJITH Kumar WISH Edappadi Planisami AIADMK