பரபரப்பான சூழல்! அடுத்த 5 நாட்களுக்கு நாடே எதிர்பார்ப்பு.. அதிர போகும் டெல்லி அரசியல்! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை தொடங்கி தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற உள்ள நிலையில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்துடன் நிகழ்ச்சி நிரல் வெளியிடாததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனை தொடர்ந்து சிறப்பு நாடாளுமன்ற கூட்ட தொடர்பான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டது.

அதில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மக்களவைத் தாக்கல் செய்யப்பட்ட நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, அஞ்சல அலுவலக மசோதா மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் 75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணம் குறித்து முதல் நாள் விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தரப்பில் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் என முடிவு செய்து அவர்கள் தரப்பிலிருந்து கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று திமுக சார்பில் காவேரி விவகாரம், நீட் தேர்வு விலக்கு உள்ளிட்டவற்றை விவாதிக்க கடிதம் வழங்கியுள்ளது.இந்நிலையில் நாளை தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடர்பான அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக சார்பில் கனிமொழி, திருச்சி சிவா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், அதிமுக சார்பில் தம்பிதுரை, அதிமுக சார்பில் வைகோ உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் அனைத்து கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் முடிவு உள்ளிட்ட விவகாரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உள்ள நிலையில் நாளை சிறப்பு கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

மேலும் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு கூட்டுதொடரை அமைதியாகவும் சுமூகமாகவும் நடத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோன்று சிறப்புக் கூட்டுத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய சிறப்பு அம்சங்கள் குறித்தும் இந்த அனைத்து கட்சிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

All party meeting held regarding special parliamentary session in Delhi today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->