அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு இந்த படைகளில் 10% ஒதுக்கீடு... மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.!!
amit shah says agnipath
இந்திய ராணுவத்தில் அக்னி வீரர்கள் என்ற புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகால ஒப்பந்தத்தில், ஆண்டுக்கு 50,000 வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பல மாநிலங்களில் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இத்திட்டத்தால் முப்படைகளில் உள்ள படைப்பிரிவுகளில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பின் இவர்களில் 25 சதவீதம் பேர் துணை ராணுவ படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி வீரர்களாக தேர்வு செய்யப்படுவோரில் 75 சதவீதம் பேருக்கு பணி பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பலன்கள் இல்லை என்பதால் திட்டம் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இளைஞர்கள் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், இத்திட்டத்தால், முப்படைகளில் உள்ள சீக்கியர், ஜாட் போன்ற படைப்பிரிவுகளில் மாற்றம் ஏற்படும் என கூறியும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10% ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.