வேலூர் பள்ளிகொண்டா வருகிறார், மத்திய அமைச்சர் அமித்ஷா! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகள் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள் நாடு முழுவதும் பாஜகவால் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த பொதுக்கூட்டங்களில் பாஜகவின் கடந்த ஆண்டு சாதனைகளைப் பற்றியும் அவர்கள் கொண்டு வந்த புதிய திட்டங்கள் பற்றியும் மக்களிடையே பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே வருகிற 11ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷா பங்கேற்க உள்ளார்.

இந்த பங்கேற்பை குறித்து வேலூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மிகுந்த உற்சாக முறையிலான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஜீன் 11ம் தேதி காலை விமானம் மூலம் புதுடில்லியில் இருந்து சென்னை வரும் அமித் ஷா பள்ளிக்கரணையில் பாஜக நிர்வாகிகளுடன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் சம்மந்தமாக ஆலோசனை செய்ய உள்ளார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்திற்கு செல்கிறார். அங்கு பாஜகவின் எதிர்கால திட்டங்கள் பற்றியும் முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்தும் அமித்ஷா பேசுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amithsha Arrives At Vellore Pallikonda soon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->