ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி.!!
Anbumani ask to DMK govt Why refuse to conduct caste census
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று பாமக சார்பில் நடைபெற்ற ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்தன கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் லந்துகொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி "2,000 ஆண்டுகளாக, ஜாதியை வைத்துதான் அடக்குமுறை செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். ஜாதி பார்த்து அமைச்சர் பதவி கொடுக்கும் திமுக அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மட்டும் ஏன் மறுக்கிறார்கள்?" என ஆவேசமாக பேசியுள்ளார்.
இதற்கிடையே தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் தமிழ் மன்றங்களை மேம்படுத்த ஆண்டுக்கு ரூ.5.60 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழ் மீது அக்கறை இருந்தால் தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க மறுப்பது ஏன்?. அரசுக்கு தமிழ் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளதா?. தமிழ்வழி கல்வியை கட்டாயமாக்க புதிய சட்டம் தேவைப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
English Summary
Anbumani ask to DMK govt Why refuse to conduct caste census