அடுத்த சர்ச்சை! பிகில் vs கைதி! விஜய் ரசிகர்களை சீண்டிய தயாரிப்பாளர்! சூடு பிடிக்கும் விவாதம்!
bigil vs kaithi
5 ஆண்டுகளுக்கு முன் பிகில் படத்தை கைதி படம் கதற விட்டதாக மறைமுகமாக, விஜய் ரசிகர்களை 'ஜப்பான்' பட தயாரிப்பாளரும், நடிகர் சூர்யாவின் உறவினருமான எஸ்ஆர் பிரபு சீண்டியுள்ளார்.
அவருக்கு பதிலடி கொடுத்துள்ள ரசிகர் ஒருவர், "என்ன அண்ணா, ஒரு நெகடிவ் review வந்ததுக்கே சினிமா Lover ஜோ, தனஞ்செயன், பச்சை அண்ணா ஓட Wife இப்போ நீங்க வரைக்கும் கதறிட்டு இருக்கீங்க. போய் கங்குவா 2 எடுக்குற வழிய பாருங்க. 15 வருசம் முன்னாடி ஹிட் குடுத்துட்டு இருந்த மனுசன். அவரு பேர இப்படி நீங்க அனைவரும் கெடுத்துட்டு திரியிரிங்களே!!" என்று தெரிவித்துள்ளார்.
கங்குவா படத்திற்கு விஜய் ரசிகர்கள் தான் காரணம் என சூர்யா ரசிகர்கள் விமர்சித்துவரும் நிலையில், இந்த பூகம்பம் வெடித்துள்ளது.
இதனை புழு சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இதுகுறித்த தனது கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அதில், "2013 பொங்கலுக்கு கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் எனும் அமர காமடி காவியம் வந்தது.
இரண்டு நாட்கள் கழித்து சந்தானத்தின் கண்ணா லட்டுதின்ன ஆசையா படம் வந்து மெகா ஹிட்டாகி. அலெக்ஸ் பாண்டியனை கதற விட்டு ஜோலியை முடித்தது.
ஆனால், பிகில், கைதி இரண்டுமே வெற்றிப்படங்கள்தான். கைதி.. பிகிலை கதறவிடடது என்பது பொய்" என்று தெரிவித்துள்ளார்.