10-ம் வகுப்பு Fail... எனக்கு அந்த மாப்பிள்ளை வேண்டாம் - மணமகளின் முடிவால் அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார்.!
bride stop marriage for groom qualification
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மணமகன் தன்னை விட குறைவாக படித்துள்ளதாகக் கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 17 ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் மாவட்டத்தில் 28 வயது பெண்ணுக்கும் 30 வயது இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
அதன் படி இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று மணப்பெண் மறுத்துள்ளார். மணமகளின் இந்த முடிவால் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். பின்னர் அவரிடம் விசாரித்ததில், மாப்பிள்ளை 10ம் வகுப்பு தோல்வியடைந்துள்ளார்.
அதனால், அவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மணப்பெண் கறாராக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மணமகளிடம் பல மணிநேரம் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இதன் காரணமாக, திருமணம் பாதியில் நின்றதால் வரதட்சனையாக கொடுக்கப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை மணப்பெண் குடுமபத்தினரிடம் மணமகன் குடும்பத்தினர் திரும்ப ஒப்படைத்து விட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.
English Summary
bride stop marriage for groom qualification