"அதற்காக தான் 108 சேவையை தொடங்கினேன்."- Dr.அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.!  - Seithipunal
Seithipunal


நகர்ப்புறங்களைப் போலவே கிராமங்களுக்கும் 108 ஆம்புலன்ஸ் 10 நிமிடங்களுக்குள் சென்றடைய வேண்டும். அப்பொழுதுதான் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர்,"சென்னையில் 108 அவசர ஊர்திகள், சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் அவசர ஊர்தி சராசரியாக அடுத்த 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது. இது பாராட்டத்தக்கது. நோயாளிகள், விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரைக்காக்க  உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். 

அதற்காகத்தான் எனது பதவிக்காலத்தில் 108 சேவையை தொடங்கினேன். சென்னையில் அவசர ஊர்தி வந்து சேரும் நேரம் 8.40 நிமிடத்திலிருந்து 7நிமிடமாக குறைக்கப்பட்ட்டுள்ளதால் பல உயிர்கள் காப்பாற்றப்படும். ஆனால், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் 108 அவசர ஊர்திகளின் சேவையை விரைவுபடுத்த வேண்டியது அவசியம் ஆகும்.  

கிராமங்களில் அவசர ஊர்தி வந்து சேரும் நேரம் சில இடங்களில் 10 நிமிடம் முதல் 30 நிமிடங்களாக உள்ளது. கிராமப்பகுதிகளில் அவசர ஊர்தி வந்து சேரும் சராசரி நேரத்தை 10 நிமிடமாக குறைக்க வேண்டும். எனவே, அவசர ஊர்திகளின் எண்ணிக்கையை  அதிகரிக்க வேண்டும். அவசர ஊர்திகள் நிறுத்தி வைக்கப்படும் மையங்களின் எண்ணிக்கையையும் உயர்த்த அரசு முன்வர வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani ramadoss about 108 ambulance service to village


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->