சீரியலில் களமிறங்கும் குஷ்பு..!
Khushboo to enter serial ..!
கடந்த சில வருடங்களாக சீரியலில் நடிக்காமல் இருந்த நடிகை குஷ்பு தற்போது மீண்டும் சீரியலில் நடிப்பதற்கு களமிறங்கி உள்ளார்.
பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் 'வருஷம் 16' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை குஷ்பு. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் தமிழ் சினிமாவில்.
அதனை தொடந்து தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்புஇயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர்களுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். அதனை தொடர்ந்து நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதையடுத்து இவர் நடித்த "நந்தினி, நிஜங்கள், லட்சுமி ஸ்டோர்' ஆகிய சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர், இவர் கடந்த ஆண்டுகளாக சீரியலில் நடிக்காமல் இருந்தார்நடிகை குஷ்பு. இந்தநிலையில் தற்போது மீண்டும் குஷ்பு சீரியலில் நடிப்பதற்கு களமிறங்கி உள்ளார். தற்போது 'சரோஜினி' என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் டிடி தமிழ் சேனலில் விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது . தற்போது அதற்கான படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கி நடந்து இருக்கிறது என்பது கூடுதல் தகவல் .
English Summary
Khushboo to enter serial ..!