தனுஷ் இயக்கத்தில் அஜித்? உற்சாகத்தில் ரசிகர்கள்!
Ajith to direct Dhanush? Fans in excitement!
தனுஷ் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது, அஜித், தனுஷ் காம்போவில் புதிய படம் உருவாக உள்ள தகவல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பது மட்டுமில்லாமல் 'பவர் பாண்டி,ராயன் போன்ற படங்களை இயக்கியும் இருக்கிறார். இதில் 2-வதாக தனுஷ் இயக்கிய 'ராயன்'படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதையடுத்து தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இட்லி கடை என்ற படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார்தனுஷ் . இப்படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது என்றும் மேலும், 'குபேரா, தேரே இஷ்க் மெய்ன்' என்ற படங்களையும் தன் கைவசம் வைத்துள்ளார் என்றும் சினிமா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தனுஷ் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது, இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. அஜித், தனுஷ் காம்போவில் புதிய படம் உருவாக உள்ள தகவல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த தகவல்களால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விரைவில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Ajith to direct Dhanush? Fans in excitement!