ஆஸ்கர் விருது - பட்டியலில் முதல் திருநங்கை.!
2025 oscar award list
தமிழ் சினிமாவில் மிகவும் போற்றக்கூடிய விருதுகளில் ஒன்று ஆஸ்கர். இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறுகிறது. அதன் படி 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு கோலாகலாமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஸ்பானிஷ் திரைப்படமான 'எமிலியா பெரெஸ்' என்ற படத்தில் நடித்த கார்லா சோபியா காஸ்கான் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது, இவர் தான் ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வான முதல் திருநங்கையாகும். நடிகை பிரியங்கா சோப்ரா தயாரித்துள்ள குறும்படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை விருது வென்றவர்களின் பட்டியல்:-
சிறந்த அனிமேஷன் படம் - ப்லொவ்
சிறந்த துணை நடிகர் - கீரான் கல்கின்
சிறந்த அனிமேஷன் குறும்படம் - இன் தி ஷடோவ் ஓபி தி சிப்ரஸ்
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - பால் டேஸ்வெல்
சிறந்த அசல் திரைக்கதை - சீன் பேக்கர்
சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை - கான்க்ளேவ்