"நூலிழையில் உயிர் தப்பிய ஆந்திர முதலமைச்சர்"!....திக்...திக்...நிமிடங்கள்!
Andhra Chief Minister survived by thread
வங்கக்கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஆந்திர மாநிலத்தில் கனமழை காரணமாக, விஜயவாடா – கூடூர் தடம், காஜிபேட் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஆந்திரா வழியாக செல்லும் புதுடில்லி, பனாரஸ், அகமதாபாத், புவனேஸ்வர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
தொடர்ந்து ஆந்திர முதலமைச்சர் வெள்ளம் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், விஜயவாடா அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சந்திரபாபு நாயுடு வெள்ள சேதத்தை பார்வையிட்டுக்கொண்டு இருந்தபோது, அந்த வழித்தடத்தில் எக்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக கடந்து சென்றது. சந்திரபாபு நாயுடுவுக்கு மிக நெருக்கத்தில் அந்த ரெயில் சென்றதால், பாதுகாப்புப்படையினர் அதிர்ச்சி அடைந்தனர். இருந்த போதிலும், சந்திரபாபு நாயுடு மற்றும் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
Andhra Chief Minister survived by thread