20% கமிஷன் பெற்ற திமுக அரசு.. "மூட்டை மூட்டையாக 2000 ரூபாய் நோட்டுகள்"..!! பகீர் கிளப்பும் அண்ணாமலை..!! - Seithipunal
Seithipunal


திமுகவின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் ரூ.1,40,000 ஆயிரம் கோடி கமிஷன் பெற்றுள்ளனர்..!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிட 2000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெற்றதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் நோட்டுகளின் தன்மை மூன்றிலிருந்து நான்கு வருடங்களில் மாறினால் பொது நோட்டுகள் அச்சிடப்படும். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை. அதனால் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட வேண்டும்.

அவ்வாறு கிளீன் நோட் பாலிசி என்ற முறையில் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி செப்டம்பர் மாதம் வரை திரும்ப பெற உள்ளது. அதன் பிறகும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆகும். டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஜி 20 நாடுகளுக்கும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்து நாம்தான் சொல்லி கொடுக்கிறோம்.

இந்த நோக்கத்தை முதலில் தமிழக முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் மூட்டை மூட்டையாக பணத்தை கட்டி வைத்துக்கொண்டு தேர்தல் நேரத்தில் 2000 ரூபாய் கொடுப்பது அவர்களின் செயல். முதலமைச்சருக்கு இவ்வளவு கோபம் வருகிறது என்றால் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்காக மூட்டை மூட்டையாக பணத்தை கட்டி வைத்துள்ளனர் என்று அர்த்தம். 

திடீரென 2000 ரூபாய் திரும்ப பெறுவதாக அறிவித்தால் எங்கே போய் மாற்றுவார்கள். முதலமைச்சருக்கு இதனால் கோபம் வருவது ரசிக்கும்படியாக உள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள 130 நாட்கள் உள்ளது. ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். இப்பொழுது நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது என்னிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இல்லை.

பலரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இல்லை. நானும் பார்த்து ரொம்ப நாள் ஆகுது. இதை புரிந்து கொள்ளாத முதல்வரின் ஏமாளித்தனத்தை தான் அவருடைய ட்விட்டர் பதிவு காட்டுகிறது. கர்நாடக மாநில தேர்தல் தோல்வியை மறைப்பதாக இவ்வாறு செய்ததாக முதல்வர் சொல்கிறார். ஆனால் திமுக இரண்டு, மூன்று எம்எல்ஏக்களுடன் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருந்ததை விட பாஜக 64 எம்எல்ஏக்களுக்கு மேல் வெற்றி பெற்று உள்ளது. 

தமிழக முதல்வர் கண்ணாடியை பார்த்து தமிழகத்தில் இதற்கு முன் நடைபெற்ற சில தேர்தல்களில் திமுக 2 எம்எல்ஏக்களை பெற்றது தான் படுதோல்வி, எம்பிக்கள் பூஜ்ஜியம் பெற்றது படுதோல்வி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்திக் கொள்ளலாம் புது 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி வழங்கினால் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு வங்கிகள் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளுமே தவிர புது 2000 ரூபாய் நோட்டுகளை வழங்காது. இதுதான் அறிவிப்பு. 

இதில் மிகப்பெரிய தாக்குதல் திமுகவிற்கு தான் நடந்துள்ளது ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் என இரண்டு ஆண்டுகளில் ஏழு லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடப்பட்டுள்ளது. இதில் 20% கமிஷன் வைத்துக் கொண்டால் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய். அதை யாரும் 100 ரூபாய் நோட்டுகளில் வைத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள் 2000 ரூபாய் நோட்டுகளில் சாக்குப் பைகளில் தான் வைத்துக் கொண்டிருப்பார்கள்" என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai accused DMK of hoarding Rs 2000 notes


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->