''சமூகத்தை திமுகவிடம் அடகு வைத்துவிட்டார்'' - அண்ணாமலை கடும் விமர்சனம்!
Annamalai criticism Thirumavalavan
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், சனாதன எதிர்ப்பு, சனாதன வாய்ப்பு போன்றவை குறித்து யாராவது கூட்டம் போட்டால் அழைப்பு இல்லாமல் கூட திருமாவளவன் பங்கேற்பார்.
போலி சமூகநீதி பேசிக்கொண்டு திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கு தொடர்ந்து நடக்கும் கொடுமைகளை கண்டு கொள்ளாமல் உள்ளார்.
வேங்கை வயல் சமூகத்திலும், திமுக எம்எல்ஏ மகன் வீட்டு வேலை செய்த இளம் பெண் தாக்கப்பட்ட சம்பவத்திலும் திருமாவளவன் திமுக அரசை கண்டிக்க வில்லை.
தன்னை நம்பும் சமூகத்தை திமுகவிடம் அடகு வைக்க நினைக்கிறார் திருமாவளவன். அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் அன்னதானம் செய்யவும் திமுக அரசு தடை விதித்தது.
தமிழக பாஜக நீதிமன்றத்திற்கு சென்ற நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி பெற்றது. அதனை திமுக மறைக்க பார்க்கிறது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்க இந்த முறையும் தமிழகமும் துணை நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அரசு பள்ளி மாணவர்கள் வள்ளலார் பிறந்த மண்ணில் மூன்று மொழி கற்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழ் மொழி கல்வியை வலியுறுத்துவதோடு ஆங்கிலமும் கற்றுக் கொள்வதை ஊக்குவிக்கிறார். ஆனால் தி.மு.க அரசு மக்களை பயமுறுத்தி மூன்று மொழிகள் கற்பதை தடுக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Annamalai criticism Thirumavalavan