"ஆருத்ரா விவகாரத்தில் எனக்கு தொடர்பு இல்லை".. ஆர்.எஸ் பாரதி மன்னிப்பு கேட்க கோரி அண்ணாமலை நோட்டீஸ்..!! - Seithipunal
Seithipunal


திமுக நிர்வாகிகள் சொத்து பட்டியலை கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி அண்ணாமலை வெளியிட்டிருந்தார். திமுக நிர்வாகிகள் மீது அண்ணாமலை அவதூறு பரப்பும் வகையில் சொத்து பட்டியல் வெளியிட்டதற்கு ரூ.500 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று ஆர்.எஸ் பாரதி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் 84 கோடி ரூபாய் அண்ணாமலை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டை இருந்தார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை "என் மீதும், பாஜக மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு ரூ.500 கோடி ஒரு ரூபாய் இழப்பீடாக ஆர் எஸ் பாரதியிடம் கேட்டிருந்தார். மேலும் அந்த பணத்தை PM Cares நிதிக்கு செலுத்த விரும்புகிறேன். அடுத்த 48 மணி நேரத்தில் என் மீதும் எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும் என்று பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என அறிக்கையின் மூலம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஆருத்ரா நிதி நிறுவன வழக்கில் தன் மீது அவதூறு பரப்பிய ஆர்.எஸ் பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரி அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆருத்ரா முறைகேடு விவகாரத்தில் தனக்கு தொடர்பு இல்லை எனவும், இது குறித்து அவதூறு பரப்பிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மன்னிப்பு கேக்காவிட்டால் அவர் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் அனுப்பியுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai notice for RS Bharthi apology in Arudhra scam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->